Home இந்தியா மக்கள் நீதி மய்யத்தின் முன்னெடுப்புகள் தொடரும்

மக்கள் நீதி மய்யத்தின் முன்னெடுப்புகள் தொடரும்

by Jey

மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ; சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பிற்கு முரணாக தமிழகத்தில் அமைக்கப்பட்ட “காவல் துறை புகார் ஆணையத்தை” சீரமைத்து நீதிபதிகளின் தலைமையில் இந்த ஆணையமானது அமைக்கப்பட வேண்டும் என்றுகோரி 2020-ல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வழி காட்டுதலின்படி துணைத் தலைவர் மவுரியாவால், சென்னை ஐகோர்ட்டில் தொடுக்கப்பட்ட வழக்கானது நேற்று முடித்து வைக்கப்பட்டிருக்கிறது.

நாம் கோரிய சீர்திருத்தம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிடுமாறு ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது. காவல்துறை புகார் ஆணையமானது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி அமைக்கப்படும் வரை மக்கள் நீதி மய்யத்தின் முன்னெடுப்புகள் தொடரும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

related posts