Home இலங்கை இன்று மாலை நடைபெறவுள்ள எரிபொருள் நெருக்கடி தொடர்பில் பேச்சுவார்த்தை

இன்று மாலை நடைபெறவுள்ள எரிபொருள் நெருக்கடி தொடர்பில் பேச்சுவார்த்தை

by Jey

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பான முக்கியமான பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளது.

எரிபொருள் நெருக்கடியை தீர்ப்பது தொடர்பில் முடிவுகள் எடுக்கப்படும்
இந்த பேச்சுவார்த்தை இன்று மாலை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, நிதியமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க உள்ளிட்டோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள உள்ளனர்.

எரிபொருள் நெருக்கடியை தீர்ப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன் போது முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
சமையல் எரிவாயு இன்றி கஷ்டங்களை எதிர்நோக்கும் மக்கள்

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு, சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு காரணமாக அத்தியவசிய பொருட்கள் உட்பட சேவைகளின் விலைகள் அதிகரித்துள்ளன.

இதன் காரணமாக மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். வீட்டில் உணவு பொருட்கள் இருந்து அதனை சமைத்து சாப்பிட சமையல் எரிவாயு இல்லாது மக்கள் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்

related posts