ஓரினச் சேர்க்கையாளர் ஊர்வலத்தில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
றொரன்டோவில் இன்றைய தினம் இந்த ஊர்வலம் நடைபெறவுள்ளது.
ஓரினச் சேர்க்கையாளர்களினால் ஆண்டு தோறும் இந்த ஊர்வலம் பிரமாண்டமாக நடாத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், கோவிட் பெருந்தொற்று காரணமாக இந்த நிகழ்வுகள் அண்மைய ஆண்டுகளில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இந்த ஊர்வலத்தில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்பய்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஓரினச் சேர்க்கையாளர்களை எதிர்க்கும் தரப்பினரால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.