கட்டட கலை பெருமைக்கு சான்றாக விளங்கும் மகாலுக்குள் சினிமா படப்பிடிப்பு நடத்தக் கூடாது. கட்டடம் சேதமாவதை தடுக்க வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் குரல் கொடுத்தனர். அதனால் சில ஆண்டுகளுக்கு முன் படப்பிடிப்பிற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், சமீபகாலமாக பியூட்டி பார்லர் நடத்துவோர் மகாலில் மாடல் பெண்களை வைத்து ‘போட்டோ ஷூட்’ எடுக்கின்றனர்.
தமிழகத்தில் அதிக வருவாய் ஈட்டும் வரலாற்று சின்னம் என்ற பெருமையை பெற்ற மகாலை காண பல்வேறு மாநிலங்கள், நாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர்.
மாலையில் மதுரையின் வரலாற்றை விளக்கும் ஒளி ஒலி காட்சி நடத்தப்படுகிறது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த மகாலில்தான் அதன் அலுவலகமும் இயங்குகிறது.
மகால் உள்ளே போட்டோ, வீடியோ எடுக்க பிளாஷ் லைட், அம்பர்லா லைட் பயன்படுத்த கூடாது என்ற விதிமுறைகள் உள்ளன. இதை காற்றில் பறக்க விட்டு சில மாதம் முன் ஒரு குறும்படம் எடுத்துள்ளனர். அதில் டம்மி துப்பாக்கி உட்பட சில ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளனர்.
ஏற்கனவே மகால் துாண்களின் மறைவில் காதல் லீலை நடத்தும் காதலர்கள் தொல்லையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் குறும்படம், பெரும்படம் என ஒரு கும்பல் மகாலில் ஆட்டம் போடத் துவங்கியுள்ளது. இதற்கு மகால் நிர்வாகமும் தாராள அனுமதி கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்படியே போனால் திருமண, காதணி விழா நிகழ்ச்சிகளுக்கும் வாடகைக்கு விட்டு விடுவர். பறவைகள் நுழைய கூடாதென மகாலின் மேல் வலை விரித்த மகால் நிர்வாகத்திற்கு, போட்டோ ஷூட், குறும்படம் எடுக்க அனுமதிக்க கூடாதென தெரியாதா என்பது ஆர்வலர்களின் கேள்வி.