ஜி-7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜெர்மனி சென்றுள்ளார். முன்னதாக அங்கு முனீச் நகரில் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
தொடர்ந்து அர்ஜெண்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டசை சந்தித்த பிரதமர் மோடி, இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகள், அரசியல்,பொருளாதாரம், கலாச்சாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் நடத்திய இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளை சேர்ந்த உயர்மட்டக்குழுவினரும் கலந்து கொண்டனர்.