உக்ரைன் தானியங்கள் விரயமாக்கப்படுவதனை தடுக்க கனடா உதவிகளை வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஜீ7 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்றுள்ள கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
ரஸ்யாவுடனான போர் காரணமாக தேங்கிக் கிடக்கும் உக்ரைன் தானியங்கள் விரமாவதனை தடுக்க 50 மில்லியன் டொலர்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும் போர் காரணமாக மக்கள் பட்டினியில் வாடுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.