ஹமில்டனில் சுமார் 80 நிமிடங்கள் இடைவெளியில் மூன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மெக்னோலியா பகுதியில் கவனயீனமாக துப்பாக்கியை பயன்படுத்தியதனால் அயலவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் நபர் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
ஹோல்டன் அவன்யூவில் இடம்பெற்ற மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டவர் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, டக்ளஸ் மற்றும் மார்ஸ் வீதிகளுக்கு அருகாமையில் மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.
வீடு ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்ற போதிலும் வீட்டுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.