உக்ரைனுக்கு மேலும் 350 மில்லியன் டொலர் உதவி வழங்கப்படும் என கனடா உறுதிமொழி வழங்கியுள்ளது.
ஜீ7 நாடுகளது மாநாட்டில் பங்கேற்ற கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக 200 மில்லியன் டொலர்கள் உக்ரைனுக்கு கடனுதவி வழங்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில் 75 மில்லியன் டொலர்களும், விவசாய நடவடிக்கைகள் மற்றும் தானியங்களை களஞ்சியப்படுத்துவதற்கு 52 மில்லியன் டொலர்களும், நிலக்கண்ணி வெடி அகற்றுவதற்கு 15 மில்லியன் டொலர்களும், 10 மில்லியன் மனித உரிமை பாதுகாப்பிற்காகவும் வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.