சிலி நாட்டைத் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று தங்கள் ஊழியர்களுக்கு வழக்கம் போல் வங்கியின் வழியாக சம்பள பணத்தை வழங்கியுள்ளது. சில நேரங்களில் ஒரு மாத சம்பளத்துக்கு 2 மாத சம்பளம் 3 மாத சம்பளம் எனத் தவறுதலாகச் நிறுவனம் செலுத்திவிடும். ஊழியர்களும் விவரம் தெரிந்ததும், அல்லது நிறுவனம் விளக்கம் அளித்து கேட்கும் போது அதை நிறுவனத்திடம் மீண்டும் ஒப்படைத்துவிடுவார்கள்.
சில நேரங்களில் குறைவான சம்பளம் வருவதும் நடக்கும். சமீபத்தில் ஊழியர் ஒருவருக்கு 286 மாத சம்பளத்தை தவறுதலாக ஒரே தவணையாக செலுத்தியுள்ளது. அந்த ஊழியருக்கு மாத சம்பளம் இந்திய மதிப்பின்படி ரூ.40,000. அவரின் வங்கிக் கணக்குக்குத் தவறுதலாகச் அந்த நிறுவனம் செலுத்திய தொகை ரூ. 1.42 கோடி ரூபாய். நடந்த தவறை, அந்நிறுவனம் உடனே அந்த ஊழியரைத் தொடர்புகொண்டு கூறியுள்ளது.
உடனே அந்த ஊழியரும் இதோ வங்கி சென்று பணத்தைத் திரும்ப அனுப்பி விடுகிறேன் எனக் கூறியுள்ளார். நிறுவனமும் பணம் வந்துவிடும் என்று காத்திருந்தது. ஆனால், வங்கிக்கு பணம் வந்து சேரவில்லை.
ஆனால், கடந்த ஜூன் 2-ம் தேதி தான் வேலை ராஜினாமா செய்வதாகக் கூறிவிட்டு, நிறுவனம் தவறுதலாகக் கொடுத்த சம்பளத்தை எடுத்துக்கொண்டு ஊழியர் தலைமறைவாகிவிட்டார். தற்போது அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸ் மூலம் தேடி வருகிறதாம் அந்நிறுவனம்.!