Home உலகம் அமெரிக்கா அனுப்பிய செயற்கைக்கோள் நிலவை நோக்கி செல்வதாக தகவல்

அமெரிக்கா அனுப்பிய செயற்கைக்கோள் நிலவை நோக்கி செல்வதாக தகவல்

by Jey

அமெரிக்கா அனுப்பிய செயற்கைக்கோள் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி, நிலவை நோக்கி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான ‘நாசா’ இரண்டு தனியார் ஆய்வு நிறுவனங்களுடன் இணைந்து, ‘கேப்ஸ்டோன்’ என்ற 25 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை, நியூசிலாந்தின் மகியா தீவில் இருந்து கடந்த வாரம் அனுப்பியது. பூமியின் சுற்று வட்டப் பாதையை வெற்றிகரமாக அடைந்த செயற்கைக்கோள், நேற்று அங்கிருந்து விலகி நிலவை நோக்கி செல்லத் துவங்கியது.

இந்த செயற்கைக்கோள் நான்கு மாதங்களில் நிலவின் சுற்று வட்டப் பாதையை அடையும் என நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மேலும், ‘கேட்வே’ என்ற விண்வெளி நிலையத்தை, நிலவின் சுற்றுவட்டப் பாதையில் அமைக்க நாசா திட்டமிட்டுள்ளது. விண்வெளி வீரர்களை, ‘ஆர்ட்டெமிஸ்’ என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக நிலவின் மேற்பரப்பில் இறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

related posts