கனடாவின் பிரபல தொலை தொடர்பு நிறுவனமான ரொஜர்ஸ் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
இந்த தொலைத் தொடர்பு நிறுவனத்தின் சேவைகள் உரிய முறையில் செயற்படுத்தாமல் காரணமாக இவ்வாறு வாடிக்கையாளரிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
கடந்த 15 மணித்தியாலங்களாகவே இணைய மற்றும் தொலைபேசி சேவைகள் உரிய முறையில் செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில் நுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு தமது சேவைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ரொஜர்ஸ் தொடர்பு நிறுவனத்தின் இந்த தாமதம் காரணமாக பல்வேறு தரப்பினரும் அசௌகரியங்களை எதிர் நோக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமது வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்காக தொலைத் தொடர்பு நிறுவனம் மன்னிப்பு கோரிகின்றது.