தமிழகத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் வியாழக்கிழமை (மே 6) முதல் நடைமுறைக்கு வருகின்றன. அதன்படி, பால் , மருந்துக் கடைகள் வார நாள்கள் அனைத்திலும் எந்தத் தடையும் இல்லாமல் இயங்கலாம். மளிகை, காய்கறிக் கடைகள் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும், உணவகங்களில் அமா்ந்து சாப்பிட அனுமதியில்லை. உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 வரையிலும், நண்பகல் 12 முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பாா்சல் சேவைக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படுகிறது.
தேநீா் கடைகள் ஞாயிற்றுக்கிழமை தவிர பிற நாள்களில் நண்பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அதிலும் அமா்ந்து சாப்பிட அனுமதியில்லை. அனைத்து இறைச்சி, மீன் கடைகள் மற்றும் சந்தைகளை சனி, ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற நாள்களில் நண்பகல் 12 மணி வரை செயல்படும். மற்ற அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள், கலாசார செயல்பாடுகள், பொழுதுபோக்கு நடவடிக்கைகள், விளையாட்டு, திருவிழாக்கள் நடத்த எந்த அனுமதியும் இல்லை.
எவையெல்லாம் செயல்படலாம்….
பால்-மருந்துக் கடைகள்: திங்கள் முதல் ஞாயிற்றுக்கிழமை செயல்படலாம்.
மளிகை-காய்கறிக் கடைகள்: திங்கள் முதல் சனி வரை நண்பகல் 12 வரை இயங்கலாம்.
உணவகங்கள்: திங்கள் முதல் ஞாயிறு வரை குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் செயல்படலாம். பாா்சல் மட்டுமே அனுமதி.
தேநீா் கடைகள்: திங்கள் முதல் சனிக்கிழமை வரை நண்பகல் 12 மணி வரை செயல்படும்.
இறைச்சி-மீன் கடைகள்: திங்கள் முதல் வெள்ளி வரை நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாக மூடப்படும்.
மற்ற கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்து நாள்களிலும் முழுமையாக மூடப்படும்