கனடாவில் கோவிட் பெருந்தொற்று தொடர்பில் மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோடைகால கொண்டாட்டங்கள் நிகழ்வுகள் கனடா முழுவதிலும் நடைபெறும் நிலையில் மற்றுமொரு கோவிட் அலை தாக்க கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அவதானத்துடன் செயல்படத் தவறினால் ஆபத்துக்களை எதிர்நோக்க நேரிடும் எனவும் புதிய வகை திரிபுகளின் தாக்கம் ஏற்படலாம் எனவும் மருத்துவர் கிரிஸ்ட்டோபர் லாபோஸ் தெரிவித்துள்ளார்.
கோவிட் பெருந்தொற்று திரிபுகளில் ஒன்றான ஒமிக்ரோன் திரிபின் சில உப திரிபுகளினால் அதிக அளவு பாதிப்பு கனடாவில் தற்போது ஏற்பட்டுள்ளது.
கனடாவின் அனேக பகுதிகளில் கோவிட் சுகாதார கட்டுப்பாடுகள் வெகுவாக தளர்த்தப்பட்டுள்ளன.
குறிப்பாக முக கவசம் அணிதல் உள்ளிட்ட சில முக்கிய சுகாதார கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டியது அவசியம் என சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
கோவிட் தடுப்பூசி ஏற்றி கொண்டவர்களின் கால எல்லையின் அடிப்படையில் கோவிட் தாக்கத்தின் தன்மை மாறுபடும் எனவும் தொடர்ந்தும் சுகாதார கட்டுப்பாடுகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது