கனடாவில் அண்மைய மாதங்களாக நிலை வரும் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கனேடிய மத்திய வங்கி அறிவித்துள்ளது.
பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒரு சில கடுமையான தீர்மானங்களை எடுக்க நேரிடும் என வங்கி சுட்டிக்காட்டி உள்ளது.
1998 ஆம் ஆண்டின் பின்னர் கனடாவில் மிக அதிக அளவில் பணவீக்கம் அண்மைய மாதங்களில் பதிவாகி வருகின்றது.
வட்டி வீத அதிகரிப்பானது அசாதாரண பொருளியல் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது என கனடிய மத்திய வங்கியின் ஆளுநர் டிப் மெக்கலம் தெரிவித்துள்ளார்.
பணவீக்க அதிகரிப்பு மிகவும் அதிகரித்துள்ளதாகவும் இதனால் மக்கள் வருத்தம் அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமையை தொடர்ந்தும் நீடிக்கச் செய்ய முடியாது எனவும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார.
அண்மையில் கனடிய மத்திய வங்கி வட்டி வீதத்தை இரண்டு தசம் ஐந்து வீதமாக உயர்த்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த வட்டி வீத அதிகரிப்பானது கடன், அடகு கடன் போன்ற பல்வேறு விடயங்களில் தாக்கத்தை செலுத்தும் என பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
வட்டி வீத அதிகரிப்பானது கனேடியர்களை மேலும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாத நிலைமை உருவாகினால் அது கனடாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதிக்கும் எனவும் பாதக விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்