பிரம்டனில் குழந்iயொன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த புதன்கிழமை குழந்தையொன்று திடீரென உயிரிழந்திருந்தார்.
பினாலேய்சன் க்ரசன்ட் பகுதியிலிருந்து கிடைத்த அவசர அழைப்பு தொடர்பில் மருத்துவ பணியாளர்கள் விரைந்து சென்று பார்வையிட்டுள்ளனர்.
குறித்த குழந்தை சலமனற்ற நிலையில் வீட்டில் இருந்ததாகவும் விரைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் சிகிச்சை பலனின்றி இந்த குழந்தை உயிரிழந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த குழந்தையின் வயது மற்றும் பால்நிலை பற்றிய விபரங்களை பொலிஸார் இதுவரையில் வெளியிடவில்லை.