ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத வெப்ப அலை வீசி வருகிறது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளில் வெப்பம் தகிக்கிறது.
நேற்று லண்டனில் 43 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி அங்குள்ள மக்களை அதிர வைத்தது. இந்த நிலையில் போர்ச்சுக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் மட்டும் கடந்த ஒரே வாரத்தில் கடும் வெப்பம் காரணமாக பலியானவர்கள் எண்ணிக்கை 1000-ஐ தாண்டியுள்ளது.
தற்போது நிலவும் வெப்ப நிலை குறித்து வானியல் நிபுணரான டைய்லர் ராய்ஸ் கூறும்போது, “2003-ஆம் ஆண்டு ஐரோப்பாவில் ஏற்பட்ட அதிக வெப்ப நிலையால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ 30,000 பேர் வரை பலியாகினர். ஐரோப்பா 1757-ஆம் ஆண்டுக்குப் பிறகு அதி தீவிர வெப்ப நிலையை எதிர்கொண்டுள்ளது” என்றார்.