Home இலங்கை பொது மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஜனாதிபதி நியமனம்

பொது மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஜனாதிபதி நியமனம்

by Jey

பொது மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஜனாதிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளதால் அவர் பதவி விலக வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டம் தொடரும் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமைக்கு தமது எதிர்ப்பினை தெரிவித்து காலிமுகத்திடலில் தொடர்ச்சியாக போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

நாடாளுமன்றம் மக்களின் விருப்பத்திற்கு மாறாக இன்று ஒரு முடிவை எடுத்துள்ளது. ராஜபக்சவினரே ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சிக்கு கொண்டுவந்துள்ளனர். எனவே, ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஊழல் முறைமைக்கு எதிராகவும் எமது அமைதியான போராட்டங்கள் தொடரும்.

மக்கள் எதிர்பார்ப்பது ஊழல் அற்ற மக்கள் நலனை பேணும் ஆட்சியை தான். ஆனால் இப்போதும் ராபக்சவினரின் ஆட்சியே இடம்பெறுகின்றது எனவும் இந்த ஆட்சி எதிராகவும் மக்கள் போராட்டம் தொடரும் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

related posts