Home உலகம் ஒரே பிரசவத்தில் 9 பிள்ளைகளை பெற்றெடுத்த தாய்

ஒரே பிரசவத்தில் 9 பிள்ளைகளை பெற்றெடுத்த தாய்

by Jey

மாலி நாட்டைச் சேர்ந்த ஒரு இளம்பெண், ஒரே பிரசவத்தில், ஒன்பது குழந்தைகளை பெற்றெடுத்ததுள்ளார்.

ஆப்ரிக்க நாடான மாலியில், ஹலிமா சிசி, 25, என்ற இளம்பெண், கர்ப்பம் தரித்திருந்தார். அவர், ஏழு குழந்தைகளை பெற்றெடுக்க இருப்பதாக, ‘ஸ்கேனிங்’கில் தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்க மாலியில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால், மற்றொரு ஆப்ரிக்க நாடான மொராக்கோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று முன்தினம், அவருக்கு ஒன்பது குழந்தைகள் பிறந்தன. ஏழு குழந்தைகள் பிறப்பதே அரிதாக பார்க்கப்படும் நிலையில், ஒன்பது குழந்தைகளை ஹலிமா பெற்றெடுத்து உள்ளது, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஐந்து பெண் குழந்தைகள், நான்கு ஆண் குழந்தைகள் என, ஹலிமாவின் ஒன்பது குழந்தைகளும், அவரும் உடல்நலத்துடன் இருப்பதாக, மாலி நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் பான்டா சிபி தெரிவித்தார்.
‘அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுஉள்ளதால், அடுத்த சில வாரங்களுக்கு அவர் அங்கு தங்கியிருந்து, பின் நாடு திரும்புவார்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

related posts