அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கணக்கு முடக்கம் தொடரும் என ‘பேஸ்புக்’ நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவில், கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், டிரம்ப் தோல்வியடைந்ததுடன்; ஜோ பைடன் வெற்றி பெற்றார்.
இதற்கிடையே, கடந்த ஜனவரி மாதம் 6ல், அமெரிக்க நாடாளுமன்றம் மீது, டிரம்ப் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இதற்கு, பேஸ்புக் சமூக வலைதளத்தில், வன்முறையை தூண்டும் வகையில், டிரம்ப் பதிவிட்ட கருத்துகள் தான் காரணம் என, கூறப்பட்டது. இதையடுத்து அவரது கணக்கை, பேஸ்புக் நிர்வாகம் முடக்கியது.
டிரம்பின் கணக்கை தொடர்ந்து முடக்குவது பற்றி, மேற்பார்வை நிபுணர்களிடம், பேஸ்புக் நிர்வாகம் கருத்து கேட்டது. டிரம்ப் கணக்கு, ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டதை, நிபுணர்கள் ஏற்றனர். இதையடுத்து, டிரம்பின் கணக்கு முடக்கத்தை தொடர, பேஸ்புக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.டிரம்பின், ‘டுவிட்டர்’ சமூக வலைதள கணக்கும் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.