முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) விஸ்தரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஜப்பானிய நிறுவனத்திடம், இலஞ்சம் கேட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை, ஜப்பானிய நிறுவனம் மறுத்துள்ளது.
நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிராக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் சுமத்திய குற்றச்சாட்டில் ஆதாரமற்றது என ஜப்பானிய நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
570 மில்லியன் டொலர் ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் (JICA) நிதியுதவியுடன், கட்டுநாயக்க விமான நிலைய நிர்மாணப் பணிகள் தொடர்பான விடயத்திலேயே இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இதனையடுத்து விமானப் போக்குவரத்து முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தனது பதவியில் இருந்து தற்காலிகமாக விலகினார்.