ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் கடும் வெப்ப அலையால் பற்றி எரியும் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டுவர நூற்றுக்கணக்கான தீ அணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
இத்தாலியில் கொளுத்தும் வெப்பம் காரணமாக அங்குள்ள 16 நகரங்களுக்கு “ரெட் அலெர்ட்” விடுக்கப்பட்டுள்ளது.
இத்தாலியின் பிரபலமான மிலன் நகரில் வரும் நாட்களில் 40 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பம் பதிவாகலாம் என்றும் தெற்கில் அமைந்துள்ள போலோக்னா மற்றும் தலை நகர் ரோமில் 32 டிகிரி வரையில் வெப்பம் பதிவாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனோவா, டூரின், வெரோனா உள்ளிட்ட நகரங்களுக்கும் அதிக வெப்பத்திற்கான “ரெட் அலெர்ட்” விடுக்கப்பட்டுள்ளது.