ஒன்ராறியோ பாராளுமன்றத்தில் சட்ட மன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் கொண்டுவந்த தமிழினப்படுகொலை வாரச் சட்டம் [BILL104] ஏகமனதாக நிறைவேறியுள்ளது.
கனடாவின் ஒன்ராறியோ மாநில பாடசாலை கற்கை நெறித்திட்டத்தில் மே 11- 17 வரையான நாட்களைஈழத்தில் சிறிலங்கா அரசால் நடத்தப்பட்ட மிலேச்சத் தனமான தமிழினப் படுகொலையை அனைத்து ஒன்ராறியோ மாணவர்களும் கற்பதற்கும், அறிவதற்குமான விழிப்புணர்வுக் கற்கை நெறியை கல்வித் திட்டத்தில் கொண்டு வருவதற்கான சட்ட வரைபு ( Bill104 ) ஏற்கனவே இருமுறை ஏகமனதாக ஒன்ராரியோ சட்டமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு வெற்றி பெற்ற நிலையில் இன்று மே 6ம் நாள் மூன்றாவது வாசிப்பினையும்சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் அவர்கள் மிக உருக்கமான தன் உரையின் மூலம் வெற்றிகரமாகமுன்வைத்தார். அது ஒன்ராறியோ சட்டமன்றத்தில் ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதன் மூலம் இவ்வரைவு இன்று சட்டமாகியுள்ளது. இது ஈழத்தமிழர்களுக்கு மிகுந்த மகிழ்வைத் தருகின்ற செய்தியாகும்.
இதற்காக முன்னின்று உழைத்த சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம், ஒன்றாரியோ முதல்வர் டக் போர்ட், ஏனைய சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் கனேடிய தமிழ்ச்சமூகத்தினர் அனைவரிற்கும் Tamil Review செய்திப்பிரிவும் தன் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றது.