ஒன்றாரியோ மாகாணத்தில் குரங்கம்மை நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த மூன்று நாட்களில் 58 புதிய குரங்குமை நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இவ்வாறு குரங்கமை நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை 20 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
ஒன்றாறியோ மாகாணத்தில் இதுவரையில் 258 குரங்கமை நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட நோயாளர்களின் ஒரே ஒருவர் மட்டுமே பின் எனவும் ஏனைய அனைவரும் ஆண்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு குரங்கமை நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் அதிக எண்ணிக்கையிலானவர்கள் டொரன்டோ பிரஜைகள் என்பது குறிப்பிடத்தக்கது.