பிரம்டன் நகர மேயர் பேட்ரிக் பிரவுன் எதிராக அவரது கன்சர்வேட்டிவ் கட்சி குழு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது.
கட்சியின் தலைமை பதவிக்காக பிரவுன் போட்டியிட உள்ளதாக அறிவித்திருந்தார், இந்த நிலையில் அவர் தலைமை பதவிக்கு போட்டியிட தகுதியற்றவர் என கட்சியின் உயர்மட்ட குழு தெரிவித்துள்ளது.
கட்சி நிதியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக மேயர் பிரவுன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
பிரம்டன் மேயர் பதவி தேர்தலுக்காக மீண்டும் போட்டியிட உள்ளதாக பேட்ரிக் பிரவுன் அறிவித்துள்ள நிலையில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பிராவுன் நாட்டின் தேர்தல் சட்டங்களை மீறி இருக்கலாம் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் தாம் இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நிராகரிப்பதாகவும் தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க போதிய அளவு விபரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்