Home இந்தியா இறைவனை இகழ்ந்து பேசுவது நாகரிகம் – தமிழிசை

இறைவனை இகழ்ந்து பேசுவது நாகரிகம் – தமிழிசை

by Jey

.புதுச்சேரி வேல் சொக்கநாதன் திருமண மண்டபத்தில் வள்ளலாரின் 200வது பிறந்த நாளையொட்டி மாநாடு நேற்று நடந்தது.மாநாட்டிற்கு திருக்கண்டீஸ்வரம் சாது சிவராமன் தலைமை தாங்கினார்.

செயலாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். புதுச்சேரி தலைமை சன்மார்க்க சங்க பொதுச் செயலளர் கோதண்டபாணி வரவேற்றார்.கடலுார் மாவட்ட தமிழ்ச்சங்க தலைவர் பேராசிரியர் குழந்தைவேலனார் விளக்கவுரை ஆற்றினார்.புதுச்சேரி சங்க துணை பொதுச் செயலாளர் சீத்தாலட்சுமி மாநாட்டு தீர்மானத்தை சமர்ப்பித்தார்.

மாநாட்டில் 101 வயது சன்மார்க்க தொண்டருக்கு விருது வழங்கப்பட்டது. சபாநாயகர் செல்வம் வாழ்த்திப் பேசினார்.மாநாட்டில் எம்.எல்.ஏ., ஜான்குமார், மலேசிய சன்மார்க்க சங்கத் தலைவர் செல்வமாதரசி, புதுச்சேரி சங்கத் தலைவர் கணேசன், பொருளாளர் கஜபதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

கவர்னர் தமிழிசை மாநாட்டை துவக்கிவைத்து பேசுகையில், ‘இறைவனை இகழ்ந்து பேசுவது நாகரிகம் என பல பேர் எண்ணிக் கொண்டுள்ளனர் தமிழை வளர்ப்பது ஆன்மிகம் தான்.தமிழ், தமிழ் என பேசுபவர்கள் கூட, தமிழ்வழி கல்வியை ஊக்கப்படுத்துவது கிடையாது. ஆனால்,தேசிய கல்விக் கொள்கை, தாய்மொழி வழிக் கல்வியை ஊக்கப்படுத்துகிறது’ என குறிப்பிட்டார்.

related posts