Home இந்தியா ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் நடத்த நடவடிக்கை

ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் நடத்த நடவடிக்கை

by Jey

அடுத்த ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திடக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு உரிய உத்தரவாதங்களை ஒன்றிய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விரைவில் வழங்கிட உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி, பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில் சென்னையில் நடைபெற்ற 44-வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொண்டமைக்கும். இவ்விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்தமைக்கும் தனது நன்றியை இந்தியப் பிரதமர் அவர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

related posts