Home கனடா அல்பர்ட்டா உணவு வங்கிகளில் கேள்வி அதிகரிப்பு

அல்பர்ட்டா உணவு வங்கிகளில் கேள்வி அதிகரிப்பு

by Jey

அல்பர்ட்டா உணவு வங்கிகளில் கேள்வி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மாதம் 35000 பேர் உணவுப் பொதிகளை கோரியிருந்தனர் எனவும், இது கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது 97 வீத அதிகரிப்பாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

வசதி குறைந்தவர்களுக்கு உணவு வழங்கும் நோக்கிலான உணவு வங்கிகளில் தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்புக்கள் கிடைக்கப் பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பெருந்தொற்று, பணவீக்கம், உணவுப் பொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் விலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் இவ்வாறு உணவு வங்கிகளில் கேள்வி அதிகரித்துள்ளது

related posts