றொரன்டோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரியொருவர் கொல்லப்பட்டுள்ளார்.
401 மற்றும் 400ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலைகளில் இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.
பாதசாரியின் மீது வாகனத்தை மோதுண்ட சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
தப்பிச் சென்ற சாரதி சில நிமிடங்களின் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் பொலிஸார் அவரை கைது சய்ய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்துடன் தொடர்புடைய 42 வயதான சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.