Home கனடா வதிவிடப் பாடசாலைகளில் இனவழிப்பு இடம்பெற்றது – பாப்பாண்டவர்

வதிவிடப் பாடசாலைகளில் இனவழிப்பு இடம்பெற்றது – பாப்பாண்டவர்

by Jey

கனேடிய வதிவிடப் பாடசாலைகளில் இனவழிப்பு இடம்பெற்றது என புனித பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் முதல் தடவையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆறு நாள் விஜயத்தை மேற்கொண்டு நாடு திரும்ப முன் ஊடகவியலாளர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.

பூர்வகுடியின சிறார்கள் கல்வி கற்ற வதிவிடப் பாடசாலைகளில் இனவழிப்பு இடம்பெற்றுள்ளதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

கனாடவிற்கான விஜயத்தின் போது பல சந்தர்ப்பங்களில் பாப்பாண்டவர் பகிரங்க மன்னிப்பு கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கத்தோலிக்க தேவாலயங்களினால், பூர்வகுடியின சமூகத்தினருக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் மற்றும் அடக்குமுறைகளுக்காக அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியிருந்தார்.

திட்டமிட்ட காலணித்துவத்தின் ஊடாக பூர்வகுடியின மக்கள் அழிக்கப்பட்டதாக பாப்பாண்டவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

related posts