Home இலங்கை பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துபவர்கள் இந்த விடயம் தொடர்பில் அவதானம்

பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துபவர்கள் இந்த விடயம் தொடர்பில் அவதானம்

by Jey

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக பொது போக்குவரத்தினை நாட்டு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

மிகவும் நெரிசலான பயணங்களின் போது கொள்ளையர்கள் கைவரிசையை காட்டுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொது மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தனியார் பேருந்து சேவைகள், அரச பேருந்துகள் மற்றும் தொடருந்துகள் என்பவற்றை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு அவற்றில் மக்களின் நெரிசலும் அதிகரித்துள்ளது.

இதன்போது மக்களின் பயணப் பைகள் மற்றும் ஏனைய பெறுமதிமிக்க பொருட்களை கொள்ளையிடுவதற்காக சிலர் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கின்றனர்.

எனவே, பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துபவர்கள் இந்த விடயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

related posts