Home இந்தியா அண்ணாமலை தமிழக பா.ஜ., தலைவரான பின் அரசியலில் எதிர்பாராத திருப்பங்கள்

அண்ணாமலை தமிழக பா.ஜ., தலைவரான பின் அரசியலில் எதிர்பாராத திருப்பங்கள்

by Jey

‘மதுரையில் நடந்த பாஸ்போர்ட் மோசடிகளை வெளிக்கொணர்ந்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ஜனநாயகத்தின் பாதுகாவலராக இருந்து, தன் பணியைச் செவ்வனே செய்து உள்ளார்’ என்று உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பாராட்டியுள்ளார்.

உயர் நீதிமன்ற நீதிபதியின் பாராட்டு, அண்ணாமலையை தரக்குறைவாக விமர்சிக்கும் திராவிடச் செம்மல்களுக்கு சரியான, ‘நோஸ் கட்!’ தி.மு.க., அமைச்சர்களின் ஊழல்கள் பற்றி, அண்ணாமலை வெளியிட்டிருக்கும் பட்டியலை பார்த்து, பாவம் அவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அண்ணாமலை தமிழக பா.ஜ., தலைவரான பின் தான், அரசியலில் எதிர்பாராத திருப்பங்கள் நிகழத் துவங்கியுள்ளன.

சும்மா சொல்லக் கூடாது, தி.மு.க.,வினருக்கு அவர் சிம்ம சொப்பனமாக இருக்கிறார். ‘பனங்காட்டு நரி சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாது’ என்ற பழமொழிக்கு ஏற்றபடி, இன்று திராவிட மாடல் ஆட்சியில் நடக்கும் அத்தனை தில்லாலங்கடி வேலைகளையும், அண்ணாமலை வெட்டவெளிச்சம் ஆக்குவதோடு, உண்மையான எதிர்க்கட்சித் தலைவராக செயல்படுகிறார் என்றால் மிகையாகாது.

‘வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ’ என்று ஊழல் குற்றச்சாட்டுகளை கூறாமல், தகுந்த ஆதாரங்களுடன் தி.மு.க., ஆட்சியின் அவலங்களை புட்டு புட்டு வைப்பதால் தான், அவர் மீது அவதுாறு வழக்குகள் போட திராவிட மாடல் அரசு யோசிக்கிறது என்று சொல்லலாம்.’ ஆண்டவனே ஆனாலும் நீர் செய்தது குற்றம் குற்றமே’ என்று சிவபெருமானிடம் துணிந்து வாதாடிய புலவர் நக்கீரன் போல செயல்படுகிறார்.

ஈ.வெ.ரா., பிறந்த மண் என்று தம்பட்டம் அடிக்கும் பகுத்தறிவுச் செம்மல்களுக்கு பதிலடி கொடுத்து, இது, ஆழ்வார்கள், நாயன்மார்கள் பிறந்து, பக்தியை வளர்த்த மண் என்பதையும் அண்ணாமலை நிரூபித்து விட்டார். ஹிந்துக்களின் இதயங்களில் உயர்ந்து நிற்கும் அண்ணாமலையின் அதிரடிகள் தொடரட்டும்

related posts