கனடாவில் கொவிட் பெருந்தொற்று காலத்தில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
போதைப் பொருட்கள், மதுபான வகைகள் உள்ளிட்டனவற்றை பயன்படுத்தியதனால் ஏற்பட்ட உபாதைகள் காரணமாக வைத்தியசாலை அனுமதி சம்பவங்களும் உயர்வடைந்துள்ளன.
கடந்த ஏழு மாத காலமாக இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்களை உட்கொண்டதனால் ஏற்பட்ட உபாதைகள் காரணமாக 81000 கனேடியர்கள் வைத்தியசாலை உதவியை நாடியுள்ளனர்.
கடந்த 2020ம் ஆண்டு மார்ச் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது நான்காயிரத்தினால் உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.