கனடாவில் சைக்கிள் விபத்துகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக பெருந்தொற்று காலப்பகுதியில் கனடாவில் சைக்கிள் விபத்துகளினால் வைத்தியசாலை அனுமதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சைக்கிள் விபத்துக்கள் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 42 வீதம் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.
கனடாவின் சுகாதார தகவல் நிறுவத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாணத்தில் அதிக அளவு சைக்கிள் விபத்துக்கள் இடம் பெற்றுள்ளதாகவும் அதிக எண்ணிக்கையிலானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சைக்கிள் விபத்து காரணமாக தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்க பட்டோரின் எண்ணிக்கையும் 36 வீதத்தினால் அதிகரித்துள்ளது.