அதிக வெப்பம் மற்றும் வறண்ட வானிலை தொடர்ந்தால் ஆகஸ்ட் மாதத்தில் பிரிட்டன் வறட்சியை சந்திக்கும் என்றே எச்சரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 1.5 மில்லியன் மக்கள் பாதிக்கும் வகையில் ஹாம்ப்ஷயர் மற்றும் வைட் தீவு பகுதிகளில் குழாய் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு, ஆகஸ்டு 5ம் திகதி அமுலுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
தடை உத்தரவை மீறும் குடியிருப்புகளுக்கு 1,000 பவுண்டுகள் வரையில் அபராதமும் விதிக்கப்பட உள்ளது. பிரிட்டனில் கென்ட் மற்றும் சசெக்ஸ் பகுதிகளில் எதிர்வரும் 12ம் திகதி முதல் தண்ணீர் குழாய்களுக்கு தற்காலிக பயன்பாட்டுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ள நிலையில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான வீடுகள் புதிய குழாய்த் தடையை எதிர்கொள்ள இருக்கிறது.
இதனால் சுமார் 2,200,000 மக்கள் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. குழாய்கள் மூலமாக தோட்டங்களில் தண்ணீர் பயன்படுத்தவும், வாகனங்களை குழாய் மூலமாக சுத்தம் செய்யவும், நீச்சல் குளங்களில் நீர் நிரப்பவும் இதனால் தடை விதிக்கப்படுகிறது.
இது தொடர்பில் South East நிறுவனம் தெரிவிக்கையில், தடை உத்தரவின்றி வேறு வழி தங்களிடம் இல்லை என குறிப்பிட்டுள்ளனர். மேலும் தடை உத்தரவானது எப்போது முடிவுக்கு வரும் என்பதையும் குறிப்பிட மறுத்துள்ளனர்.