Home கனடா றொரன்டோ வீடு விற்பனையில் சரிவு

றொரன்டோ வீடு விற்பனையில் சரிவு

by Jey

றொரன்டோ பெரும்பாக பகுதிகளின் வீடு விற்பனைகளில் பாரியளவு சரிவு பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஜுலை மாதத்தில் வீடு விற்பனையானது 47 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த ஜுன் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது வீடு விற்பனையானது 24 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

றொரன்டோ பிராந்திய ரியல் எஸ்டேட் சபை இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில் வீடுகளின் விற்பனை 4912 ஆக காணப்பட்டதுடன், கடந்த ஆண்டு ஜுலை மாதம் இந்த எண்ணிக்கை 9339 ஆக காணப்பட்டது.

வட்டி வீத அதிகரிப்பு காரணமாக அடகுக் கடன் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட சிக்கல் நிலைமைகளே இவ்வாறு வீடு விற்பனையில் வீழ்ச்சி பதிவாக காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

related posts