Home இந்தியா 1.73 லட்சம் கன அடி தண்ணீர், அரியலுார் மாவட்ட பாசனத்துக்கு

1.73 லட்சம் கன அடி தண்ணீர், அரியலுார் மாவட்ட பாசனத்துக்கு

by Jey

வீணாக கடலில் கலக்கும், வினாடிக்கு, 1.73 லட்சம் கன அடி தண்ணீரை, அரியலுார் மாவட்ட பாசனத்துக்கு பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலுார்-, தஞ்சை மாவட்டங்களை இணைக்கும் பகுதியில், மீன்சுருட்டி அருகே, கீழணை உள்ளது. இந்த அணையின் உயரம், 9 அடி.

அணையின் வாயிலாக, அரியலுார் மாவட்டத்தில் தென்னவநல்லுார், வேப்பக்குடி, கொல்லாபுரம், பிள்ளையாபாளையம், வீரசோழபுரம் ஆகிய கிராம பகுதிகளில் உள்ள விளை நிலங்களும், கடலுார் மாவட்டத்தில், காட்டுமன்னார் கோவில், சிதம்பரம் ஆகிய பகுதி விளை நிலங்களும் பாசனம் பெறுகின்றன.கல்லணையை தொடர்ந்து, கொள்ளிடம் ஆற்றில் வரும் தண்ணீர், இந்த கீழணையில் தேக்கப்படுகிறது.

அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், வடவாறு, வடக்கு ராஜன் வாய்க்கால் ஆகியவற்றின் வழியாக செல்வதன் வாயிலாக, கடலுார் மாவட்டத்தில், 75 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.வடவாறு வழியாக பெறப்படும் தண்ணீர், வீராணம் ஏரியில் தேக்கப்பட்டு, அங்கிருந்து 44 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, சென்னைக்கும் குடிநீர் தேவைக்கு அனுப்பப்படுகிறது.

தற்போது, மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் காரணமாக, கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது.

இதனால், கீழணைக்கு கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு, 1 லட்சத்து, 74 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.இதில், வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக வினாடிக்கு, 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

தற்போது, பாசனத்திற்கு தண்ணீர் தேவைப்படாததால், பொதுப்பணித்துறையினர், உபரிநீரை கொள்ளிடம் ஆற்றின் வழியாக திறந்து விட்டுள்ளனர்.இதனால், கீழணையில் இருந்து வினாடிக்கு, 1 லட்சத்து, 73 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் கொள்ளிடம் ஆற்றின் வழியாக சென்று, மயிலாடுதுறை மாவட்டத்தில் மேந்திர

related posts