Home இந்தியா துணை கலெக்டர், டி.எஸ்.பி., பதவிகளை பெற இன்றைய இளைஞர்களிடத்தில் ஆர்வம்

துணை கலெக்டர், டி.எஸ்.பி., பதவிகளை பெற இன்றைய இளைஞர்களிடத்தில் ஆர்வம்

by Jey

டி.என்.பி.எஸ்.சி., மற்றும் போலீஸ் தேர்வுகளில், தமிழ் பாடத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், அரசு கல்லுாரிகளில் பி.ஏ., தமிழ், மொழியியல் வகுப்புகளில் சேர மாணவர்களிடத்தில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் இளங்கலை பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. சிறப்பு பிரிவு, கலை, அறிவியல் பிரிவுகளுக்கென தனித்தனியாக முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது.

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1, 2 மற்றும் 4 ஆகிய தேர்வுகளில் அதிக பட்சமாக தமிழ் பாடத்தில் இருந்து வினாக்கள் இடம் பெறுகின்றன.

அதற்கு பின், பொது அறிவு, வரலாறு, கணிதம், அறிவியல் போன்ற பாடங்களில் இருந்து வினாக்கள் இடம் பெறுகின்றன. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்விலும், தமிழ் மற்றும் கொள்குறிவகை தேர்வு நடத்துகின்றனர். அதில், தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே அடுத்த தேர்வுக்கான விடைகள் திருத்தப்படும் என்பது நடைமுறை.

இதனால் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் முடித்து அரசு நடத்தும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., துணை கலெக்டர், டி.எஸ்.பி., பதவிகளை பெற இன்றைய இளைஞர்களிடத்தில் ஆர்வம் அதிகரித்துள்ளது.இதன் காரணமாகவே அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் பெரும்பாலும் பி.ஏ., தமிழ் மற்றும் பி.ஏ., மொழியியல் பாடப்பிரிவுகளை தேர்வு செய்கின்றனர்.

related posts