அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பங்களாவில் எப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதிபர் பதவியில் இருந்து விலகிய போது வெள்ளை மாளிகையில் இருந்து ஆவணங்களை அள்ளிச்சென்றாரா என்று ஆய்வு நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தநிலையில் இது குறித்து முன்னாள் அதிபர் டிரம்ப் கூறியதாவது:- புளோரிடாவில் பாம் பீச்சில் உள்ள எனது அழகான இல்லமான மார்-ஏ-லாகோ தற்போது எப்.பி.ஐ. அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டு, சோதனையிடப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், இது நமது தேசத்திற்கு இருண்ட காலமாகும், ஆயுதத்தை கொண்டு அமெரிக்க நீதி துறை தவறாக பயன்படுத்தப்படுகிறது.
மேலும் 2024 ஆம் ஆண்டு நான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை விரும்பாத சில தீவிர இடது ஜனநாயகக் கட்சியினரின் மறைமுக தாக்குதல் என குற்றம்சாட்டி உள்ளார்.