கனடாவில் குரங்கம்மை தொற்று உறுதியாளர் எண்ணிக்கை ஆயிரத்தையே கடந்துள்ளது என அந்நாட்டு பொது சுகாதார முகவர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஒன்றாறியோ மாகாணத்தில் சுமார் 478 நோய் தொற்று உறுதியானவர்கள் பதிவாகியுள்ளனர் அதற்கு அடுத்தபடியாக கியூவேக் மாகாணத்தில் 425 தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர் .
இதுவரையில் மொத்தமாக 1008 குரங்கு நோய் தொற்று உறுதியானவர்கள் மொத்தமாக பதிவாகியுள்ளனர்.
இந்த குரங்கம்மை நோய் தொற்று தானாகவே சில வாரங்களில் குணமடைந்துவிடும் என தெரிவிக்கப்படுகிறது எனினும் ஒரு சிலருக்கு இது பாரதூரமான தாக்கங்களை ஏற்படுத்தும் எனவும் சில சமயங்களில் உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குரங்கமை நோய் தொற்று பரவுகை தொடர்பில் தொடர்ச்சியாக தகவல்கள் பதியப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது