கனடாவின் விமானப்படை விமானங்களில் ஒன்றான ஸ்னோவ்போர்ட் ரக விமான பயன்பாட்டுக்கு தற்காலிக அடிப்படையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் இந்த ரக விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாகியிருந்தது.
கனடாவின் ரோயல் கனடியன் எஃப்ஓஸ் அல்லது கனடிய விமானப்படையினர் இந்த விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த விமானங்களின் தரம் தொடர்பில் விரிவான ஆய்வுகள் நடத்தப்படும் வரையில் இந்த விமானங்களை வானில்செலுத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விமானங்கள் பறப்பதற்கு தகுதியானவை என உத்தரவாதம் அளிக்கப்படும் வரையில் விமான பயணங்களுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வகை விமானங்கள் அதிகளவில் விமான சாகசங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.