யாழ். அச்சுவேலி – காலானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கோழிக்குஞ்சு ஒன்று நான்கு கால்களுடன் பிறந்துள்ளது.
குறித்த கோழிக்குஞ்சு சுறுசுறுப்பாக காணப்பட்டுள்ள போதும் திடீரென உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோழி வளர்ப்பினை ஜீவனோபாயமாக கொண்ட வீடொன்றில் ஆறு கோழிக்குஞ்சுகள் பொரித்த நிலையில், அதில் ஒன்று நான்கு கால்களுடன் பிறந்துள்ளது.
ஏனைய கோழிக்குஞ்சுகளைப் போல இந்த கோழிக்குஞ்சும் சுறுசுறுப்பாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோழிக்குஞ்சினை பிரதேசத்தில் உள்ள மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.