-தட்சிண கன்னடா – குடகு எல்லையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
தட்சிண கன்னடா கல்மகரு, கல்லுங்குன்டி, மென்டகஜே, குலிக்கனா பகுதிகளில், நேற்று முன்தினம் மாலை 6:30 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது.
இதை உணர்ந்த மக்கள், அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர்.இதேபோன்று, தட்சிண கன்னடா – குடகு மாவட்ட எல்லையான சட்டேகள்ளுவிலும் ஏற்பட்டது.
45 நாட்களுக்கு முன், இதேபோன்று தட்சிண கன்னடா – குடகு எல்லை சுள்ளியாவில் ஒரு வாரத்தில் எட்டு முறை நில அதிர்வு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.