Home கனடா கடவுச்சீட்டுக்காக போலித் தகவல்களை வழங்க வேண்டாம்

கடவுச்சீட்டுக்காக போலித் தகவல்களை வழங்க வேண்டாம்

by Jey

வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் போலி தகவல்களை சமர்ப்பிக்க வேண்டாம் என கனடிய சமூக அபிவிருத்தி சிறுவர் மற்றும் குடும்ப அமைச்சர் கரீனா கோல்ட் கோரியுள்ளார்.

கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக சிலர் போலியான தகவல்களை வழங்கி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கடவுச்சீட்டை விரைவாகப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு மோசடிகளில் மக்கள் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது என சுட்டிக்காட்டி உள்ளார்.

கடவுச்சீட்டு பெரும் நோக்கில் விமான சீட்டுகளை போலியாக பதிவு செய்து அவற்றை சமர்ப்பித்து சிலர் கடவுச்சீட்டு பெறுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

இரண்டாம் ஆண்டு காலமாக கோவிட் பெருந்தொற்று நிலைமைகள் காணப்பட்டதனால் கடவுச்சீட்டு வழங்குவதில் தாமத நிலைகள் காணப்படுகின்றன.

எவ்வாறெனினும் தற்பொழுது துரித கதையில் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் நெரிசல் நிலை குறைந்துள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

related posts