சஸ்காடூனில் அண்மைக் காலமாக திருட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்வடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
சஸ்காடூனில் வீடுகள் நிர்மான எண்ணிக்கை பெரிதும் உயர்வடைந்துள்ளதாகவும் அதற்கு நிகராக கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் குறி;ப்பிடப்படுகின்றது.
இவ்வாறு வீடுகள் நிர்மானிக்கப்படும் பகுதிகளில் துரதிஸ்டவசமாக அதிகளவில் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகி வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கட்டிடங்களை நிர்மானம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களே அதிகளில் திருடப்படுகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கட்டிட நிர்மானப் பொருட்களுக்கு கடுமையான கிராக்கி நிலவி வரும் நிலையில் இவ்வாறு பொருட்கள் களவாடப்பட்டு வருவதகாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.