ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடித்து 30க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் நேற்று வழக்கமான தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது மசூதிக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில், 30க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.
உடனடியாக, ராணுவ வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.ஆப்கானிஸ்தானில் ஷியா – சன்னி பிரிவினர் இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. சமீபகாலமாக நடந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது என்பது குறிப்பிடத்தக்கது.