றொரன்டோவின் சில பகுதிகளில் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
றொரன்டோ பெரும்பாக பகுதியின் அநேக இடங்களில் இவ்வாறு மழை பெய்துள்ளது.
சீரற்ற காலநிலை தொடர்பில் கனேடிய வளிமண்டலவியல் திணைக்களம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக றொரன்டோ, பீல் மற்றும் யோர்க் பிராந்தியங்களில் இவ்வாறு மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
பிரம்டனில் பலத்த காற்று வீசியதாகவும் 100 மில்லி மீற்றருக்கு மேல் மழை பெய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.