Home கனடா கனடாவில் ஆங்கிலம், பிரெஞ்சு மொழி பேசுவோருக்கு கூடுதல் சம்பளம்

கனடாவில் ஆங்கிலம், பிரெஞ்சு மொழி பேசுவோருக்கு கூடுதல் சம்பளம்

by Jey

கனடாவில் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியை பேசுபவர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு மொழிகளையும் பேசுபவர்களுக்கு இவ்வாறு கூடுதல் சம்பளங்கள் வழங்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளைப் பேசும் பணியாளர்கள் 60550 டொலர்களை சராசரி சம்பளமாக பெற்றுக்கொள்கின்றனர்.

ஆங்கிலம் மட்டும் பேசும் பணியாளர்கள் 55250 டொலர்களை சராசரி சம்பளமாக பெறுகின்றனர்.

பிரெஞ்சு மொழியை மட்டும் பேசும் பணியாளர்கள் 43040 டொலர்களை சராசரி சம்பளமாக பெற்றுக் கொள்கின்றனர்.

இதன்படி இரண்டு மொழியிலும் தேர்ச்சி பெற்றவர்கள் ஆங்கிலத்தை மட்டும் பேசுபவர்களை விட 10 வீதமும், பிரெஞ்சு மொழியை மட்டும் பேசுபவர்களை விட 40 வீதமும் அதிக சம்பளம் பெற்றுக்கொள்கின்றனர்.

related posts