Home இந்தியா சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு

சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு

by Jey

தூத்துக்குடி புனித மரியன்னை மகளிர் கல்லூரியில் மாவட்ட போலீஸ் துறை சார்பில் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி பேசினார். அப்போது, தற்போதைய சூழ்நிலையில் அனைவரும் செல்போனை அதிகம் உபயோகப்படுத்துகின்றனர். செல்போன் மூலமாக நமக்கு தேவையான அனைத்தும் இருந்த இடத்திலேயே பெறும் வசதிகள் வந்துவிட்டது.

இதனால் ஏற்படும் சைபர் குற்றங்களில் இருந்து எப்படி நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு கண்டிப்பாக உங்களிடம் இருக்க வேண்டும்.

சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கே தாங்கள் பாதிக்கபட்டிருக்கிறோம் என்று தாமாதமாகத்தான் தெரியவருகிறது. ஆன்லைனில் டிரேடிங் கம்பெனி மூலம் அதிக லாபம் பெறலாம் என்று வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்.

 

related posts