Home இலங்கை லங்கா சதொச ஊடாக விலை குறைப்பு

லங்கா சதொச ஊடாக விலை குறைப்பு

by Jey

2 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைக்கப்பட்டுள்ள 12 பொருட்களினதும் விலைகள் தொடர்பான முழு விபரம் வெளியாகியுள்ள நிலையில், அதில் கடந்த மாதம் இதே திகதியில் குறித்த பொருட்களின் விலை மற்றும் இன்று விலை குறைப்பு செய்யப்பட்ட பின்னர் அதே பொருட்களின் விலைகள் என்பன சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

சில அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

லங்கா சதொச ஊடாக குறித்த அத்தியாவசிய பொருட்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் அறிக்கையொன்றின் மூலம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி சீனி, அரிசி, பெரிய வெங்காயம், காய்ந்த மிளகாய், உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளைப்பூடு உள்ளிட்ட பொருட்களின் விலைகளே இவ்வாறு குறைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டு 180 ரூபா என்ற புதிய விலைக்கு விற்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

related posts