Home கனடா றொரன்டோவில் மெனிங்கோகோகல் தொற்றினால் ஒருவர் பலி

றொரன்டோவில் மெனிங்கோகோகல் தொற்றினால் ஒருவர் பலி

by Jey

றொரன்டோவில் மெனிங்கோகோகல் பக்டீரியா தொற்றினால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த நோய்த் தொற்று காரணமாக மேலும் இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜுலை மாதம் 15ம் திகதி முதல் 17ம் திகதி வரையிலான காலப் பகுதியில் மூன்று பேருக்கு இந்த நோய் அறிகுறிகள் தென்பட்டுள்ளன.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த பக்டீரியா தொற்றுக்கு இலக்கான மூன்று பேரும் கனடாவில் பிறந்தவர்கள் அல்ல எனவும் அவர்களுக்கு சிறு வயதில் தடுப்பூசி ஏற்றப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

related posts